மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து: பத்ரி சேஷாத்ரி கைது

Date:

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில் வலதுசாரி ஆதரவாளர், பதிப்பாளர், பேச்சாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் “மணிப்பூர் வன்முறைக்குக் காரணம் அம்மாநில உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான். மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்” என்று பேசியிருந்தார்.

இது குறித்து பெரம்பலூர் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் அவரை இன்று காலை சென்னையில் வைத்து கைது செய்தது. மேலும், பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்