சூர்யாவின் ‘கங்குவா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Date:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் வெளியானது . தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போர்வீரன் தோற்றத்தில் குதிரை மீது வாளை ஏந்தியபடி சூர்யா அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்