கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: நோயாளிகள் 12 பேர் உயிரிழப்பு!

Date:

மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு இல்லாத நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, வாசையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளில் 12 பேர் தீ விபத்து காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாசை விரார் நகராட்சி ஆணையம் இந்த தகவலை வெளியிட்டதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்