27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

கதிர்காமம் சென்றவர்கள் கவிழ்ந்தனர்

கதிர்காமத்தில் ஏழுமலைக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏழுமலையின் மேல் தளத்தில் இருந்து கீழ் தளம் நோக்கி பயணித்த கப் ரக வாகனமே விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் 7 பெண்களும், 10 வயது சிறுமியும் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் சாரதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், ஏனையவர்கள் சிறு காயங்களுடன் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

லசந்தக்கு நீதி வேண்டும் – சஜித்

east tamil

Leave a Comment