இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று (21) பதிவாகியுள்ளனர். நேற்று 578 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், அவர்களில் 62 பெர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். 516 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கோவிட் -19ஐ தடுப்புக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
குருநாகலல் மாவட்டத்தில் நேற்று அதிகளவில் 171 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். வெல்லவ மற்றும் கணேவத்தை பகுதிகளில் இருந்து 100 பேரும், குலியாபிட்டியவிலிருந்து 59 பேரும், குருநாகலிலிருந்து 10 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் இருந்து நேற்று 51 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இருந்து தலா 43 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 42 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 32 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 28 பேரும், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தலா 18 பேரும் மற்றும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்று எகிறி வருகிறது.
நேற்று யாழ் மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 11 பேர் யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்கள்.
யாழ் பொலிசாரிடம் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, 258 பொலிசார் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.