காங்கேசன்துறை துறைமுகம் திறப்பு: சொகுசுக்கப்பல் வந்தது!

Date:

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், யாழ் இந்தியத் துணைத் தூதுவர், கப்பல்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்படை உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், இன்றையதினம் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் ஒரு கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் வந்தடைந்த இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை அமைச்சர் அடங்கிய குழாம் வரவேற்றதோடு கப்பலின் கப்டனுக்கு நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா, காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரத்துக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

எனினும் இராமேஸ்வர பகுதியில் சில வேலைத்திட்டங்கள் கப்பல் சேவை ஆரம்பிக்க முன்னர் முன்னெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக கப்பல் சேவினை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

எனினும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தொடர் முயற்சியின் பயனாக விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்