24.9 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் யாழ் மாணவன் தற்கொலை!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) சடலமாக மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, நாரத்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் இன்று (16) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது, மாணவன் சடலமாக தொங்குவதை கண்டு அலறியுள்ளார்.மற்ற மாணவர்களும் அங்கு வந்து, மாணவனின் உடலில் உயிர் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்துள்ளனர்.

எனினும், மாணவன் உயிரிழந்திருந்தார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தனர்.மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி நேரில் வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன்படி, நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது.

சடலத்தின் பிரேதப் பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

east tamil

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம்: இந்திய துணைத்தூதருக்கு சீ.வீ.கே கடிதம்!

Pagetamil

‘அரிசி ஆலைகள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்’: ஜனாதிபதி எச்சரிக்கை!

Pagetamil

பாராளுமன்றத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கும்!

Pagetamil

பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரை மாய்த்த வவுனியா இளம்பெண்!

Pagetamil

Leave a Comment