அண்மையில் மருதங்கேணி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கியை நீட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், ஏற்கெனவே கடமை நேர துப்பாக்கியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2018 ஒக்ராபர் 3ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
தெபுவன சந்தியில் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன், ஏனையவர்களையும் அச்சுறுத்தினர்.
அவரது கட்டுங்கடங்காத நடத்தையடுத்து, விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு, அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அப்போது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
அந்த பொலிஸ்காரரே கஜேந்திரகுமார் மீதும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பழக்க தோசத்தில் அவர் அப்படி செயற்பட்டிருப்பதாக சமூக ஊடங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.




