அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இன்று (12) திறக்கப்படும்.
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக மே மாதம் 29ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டின் முதல் கல்வித் தவணையின் மூன்றாம் கட்டத்திற்காக இன்று பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், ஜூலை 20 ஆம் திகதி வரை கல்விச் செயற்பாடுகள் தொடரும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பாடசாலை தவணை ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நிறைவடையும்.
முந்தைய அறிவிப்புகள் இருந்தபோதிலும், கல்வி அமைச்சகம் பல்வேறு காரணிகளால் பாடசாலை நாட்காட்டியை பல சந்தர்ப்பங்களில் திருத்தியது.




