27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையிலிருந்து பனங்கிழங்கு, வெற்றிலை கொண்டு சென்றவருக்கு அவுஸ்திரேலியாவில் பெருந்தொகை தண்டம்!

அவுஸ்திரேலியாவிற்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருட்களை, கடந்த சில வாரங்களில் மறைத்து எடுத்து சென்ற 4 பேருக்கு, 22,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அபராதம் விதிக்கப்பட்டவர்களில் இலங்கையரும் ஒருவர். அவர் மே 16 அன்று சிட்னி விமான நிலையத்தில் சிக்கினார். ஒடியல் மா, வாழைப்பழம், வெற்றிலையுடன், சில தாவர தண்டுகளையும் மறைத்து கொண்டு சென்றுள்ளார்.

சட்டவிரோதமாக தாவரங்களை அவுஸ்திரேலியாவுக்குள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் 5,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் விலங்குகளில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து அவுஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் விலங்கு வைரஸ் பரவினால்  பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் அழிக்கப்படலாம் என கருதுகிறார்கள். ஆபத்தான் பக்டீரியாக்கள் மூலம் விவசாயத்துறை பாதிக்கப்பட்டால் 11 பில்லியல் டொலர் வரை இழப்பு ஏற்படுமென மதிப்பிடப்படுகிறது.

உயிரியல் பாதுகாப்பு சட்டங்கள் கடந்த ஆண்டு இறுதியில் திருத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அதிகபட்ச அபராதம் 5,500 டாலர் ஆக உயர்த்தப்பட்டது.

இலங்கையர் தவிர, வியட்நாம், பிலிப்பைன்ஸை சேர்ந்த மேலும் 3 பயணிகளிடமும் தண்டம் அறவிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

அந்தார்ட்டிக்கா மலையில் முதலில் ஏறிய இலங்கையர்

east tamil

எல்லை தாண்டிய 10 தமிழக மீனவர்கள் கைது!

Pagetamil

Leave a Comment