சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவிற்கு ஆசிரியர் ஒருவர் உதவியதாக பெற்றோரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் பரீட்சை கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக என வடமத்திய உதவி மாகாண கல்விப் பணிப்பாளர் (பரீட்சைகள்) எஸ்.ஆர்.பிரியங்கர தெரிவித்தார்.
அனுராதபுரம் கருக்கன்குளம் விஜயபா வித்தியாலயத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் பரீட்சை கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியராக உறுதிப்படுத்தப்பட்டார். எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கும் வகையில் அவர் பரீட்சை கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிரியங்கரா தெரிவித்தார்.
இந்த ஆசிரியர் கணிதம் கற்பிப்பதாகவும், கணித பாடம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகவும், கடந்த வாரம் ஆசிரியரை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமானதுடன், இச்சம்பவம் காரணமாக குறித்த ஆசிரியரின் பரீட்சை கடமைகள் மே 30ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு ஆசிரியர் பரீட்சை நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரை எச்சரித்து பரீட்சை கடமைகளில் இருந்து நீக்கிய போதிலும், ஆசிரியர் பணி இடைநிறுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



