‘உயர் நீதிமன்றத்தை நாடப் போகிறேன்’: வெடுக்குநாறிமலைக்கு வந்து புக்கை வாங்கி சாப்பிட்ட பின் வீரசேகர வீராப்பு!

Date:

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக மிரட்டல் தொனியில் கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

இன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் இதனை குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மற்றும் சிங்கள மக்கள் குழுவொன்று இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்கு வந்திருந்தனர்.

அவர்கள் மலையுச்சிக்கும் சென்று பார்வையிட்டனர்.

இன்று ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. வீரசேகர குழுவினரும் ஆலயத்தின் பொங்கலை வாங்கி உண்டனர்.

பின்னர், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக சரத் வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் கூறினார்.

இதேவேளை, இன்று அங்கு கடுமையான மழை பெய்வதால், ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் 20 அடி தற்காலிக தகர கொட்டகையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்தின அடிப்பகுதியில் சிறிய தகர கொட்டகையமைத்து இளைஞன் ஒருவர் குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை விற்று வந்தார். அந்த கொட்டகையையும் அகற்றுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்துக்கு உழவு இயந்திரத்தில் வர முடியாது என்றும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்