வலிகாமம் வடக்கு, தையிட்டியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற வலியுறுத்தி யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மக்கள் பிரதிநிதிகள், தையிட்டியில் போராட்டக் களத்துக்கு சென்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டகளத்துக்கு சென்றனர்.
அங்கு ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





