கானியா மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அனுமதி!

Date:

2019 நவம்பரில் வெள்ளை வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸில் பொய் முறைப்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் மீதான குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் குரலே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், குறித்த குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய நீதிபதி அனுமதி வழங்கினார்.

அதன்பின், வழக்கை ஜூன் 15ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனித பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு அருகில் வெள்ளை வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று தம்மை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸில் பொய் முறைப்பாடு செய்ததற்காக கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை நவம்பர் 25, 2019 அன்று தாக்கல் செய்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் சட்டவிரோத சுருக்கு வலையின் ஆதாரத்தை அழித்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி வருகின்றனர்

மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை கடற்றொழில் நீரியல்...

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்