2021 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பிக்கின்றன. நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கின்றன.
இந்த ஆண்டின் முதலாவம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் 9 ஆம் திகதி முடிவடைந்தது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில், வகுப்பறைக்கு மாணவர்களின் எண்ணிக்கை 15 க்கும் குறைவாக இருந்தால் மாணவர்கள் தினமும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம், அதே நேரத்தில் 16 முதல் 31 வரையான மாணவர்களை கொண்ட வகுப்பறைகள் பிரிக்கப்பட்டு இரண்டு குழுக்களாக கல்விச் செயற்பாடு இடம்பெறும்.
மாணவர்களின் எண்ணிக்கை 31 ஐ விட அதிகமாக இருந்தால், மூன்று குழுக்களாக பிரிக்கப்பட வேண்டும்.
மாற்றங்கள் அறிவிக்கப்படும் வரை இந்த நடைமுறை தொடரும் என்று அவர் கூறினார்.
இரண்டாவது தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது, அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று செயலாளர் கூறினார்.
சமூக இடைவெளி பேண வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், பாடசாலைகளில் நோய்வாய்ப்பட்ட அறைகளை உருவாக்க வேண்டும், முகக்கவசங்களை அணிய வேண்டும் மற்றும் எந்தவொரு போக்குவரத்து முறையிலும் பள்ளிக்கு செல்லும்போது முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.