கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு!

Date:

எல்பிட்டிய எத்கதுர திவித்துரவத்த ஏரியில் உள்ள கட்டுபொல பயிர்ச்செய்கை வயலில் இளைஞன் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திவித்துரவத்தை பகுதியில் வசிக்கும் சாந்தகுமார சரத் குமார (21) என்பவரின் சடலமே நேற்று பிற்பகல் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் குழுவுடன் சென்ற இந்த இளைஞன் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று நாய் அந்த பகுதியில் நிலத்தை தோண்டி, சடலத்தை இழுத்த நிலையில், சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உற்ற நண்பனையும் காணவில்லை எனவும், அவரது தொலைபேசி இயங்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போன நண்பரின் வீட்டில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் பாதி புதைக்கப்பட்ட இடத்தில் அவரது பணப்பை காணப்பட்டதாகவும், அதற்கமைய, சடலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வடக்கில் நிரந்தர நியமனம் கோரும் வெலிஓயா சிங்கள தொண்டர் ஆசிரியர்கள்

முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர்...

இனியபாரதி பயங்கரவாத தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித...

பாதாள உலகத்துடன் தொடர்பா?: டிஐஜி வருண ஜெயசுந்தரவிடம் விசாரணை!

இந்தோனேசியாவிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கெஹெல்பத்தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்