டெல்லியின் மெட்ரோ ரயிலில் தம்மாந்துண்டு ஆடை அணிந்து பயணம் செய்த இளம் பெண்ணின் வீடியோ வைரலாகி உள்ளது.
மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போன்று ஒரு அரைகுறை ஆடை அணிந்து கொண்டு மடியில் பேக் ஒன்றை வைத்துக்கொண்டு இளம் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று நேற்று டுவிட்டரில் வைரலானது.
டெல்லி மெட்ரோவில் உர்பி ஜாவித் போன்ற ஒருவர் என கூறி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உர்பி ஜாவித் தனது அரை குறை ஆடைகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவித் ஒரு டிரெண்டிங் டிசைனராக உள்ளார்.
‘இது உர்பி ஜாவித் அல்ல’ என்ற தலைப்புடன் வீடியோவை டுவிட் செய்யப்பட்டு உள்ளது. உர்பி போன்று பொது இடங்களில் இதுபோன்ற ஆடைகளை அணியக் கூடாது என பல விமர்சனங்கள் எழுந்தன.
Seriously this is in delhi
Akhir Majburi kya hai ?#Delhi #delhimetro #PriyankaChopra #ChitrangdaSingh pic.twitter.com/x2BkeJsINz
— Tanisha Batra (@TanishaBatra80) March 31, 2023
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) அதிகாரிகள் இது போன்ற ஒரு சம்பவம் கவனிக்கப்படவில்லை என்று பதிலளித்தனர்.
டெல்லி மெட்ரோ வழியாக தினமும் 60 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர். அவற்றில் ஒன்றை மட்டும் கண்காணிக்க முடியவில்லை. மெட்ரோவில் டிரஸ் கோட் கிடையாது, டெல்லி மாநகரில் உள்ள விதிமுறைகள் தான். பொது இடங்களைப் போலவே, மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்.