அரைகுறை ஆடையுடன் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு, பணக்கார ஆண்களை வலையில் விழுத்தி, அவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டி பணம் பறித்து வந்த அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெஸ்தெத் கவுர். 23 வயதான அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 2 இலட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவ்வளவு பின்தொடர்பவர்களிற்கு காரணம், ஜெஸ்தெத் கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடையுடன் புகைப்படங்கள், வீடியோவை பகிர்ந்து வந்தமையே.
ருவிற்றரில் 1K பின்தொடர்பவர்களையும், YouTube இல் 162K சந்தாதாரர்களையும் மற்றும் Facebook இல் 20K பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு பலர் மெசேஜ் அனுப்பியுள்ளனர். அதில், பணக்காரர்களை மட்டும் ஜெஸ்தெத் கவுர் குறிவைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனக்கு மெசேஜ் அனுப்பும் பணக்காரர்களுடன் ஜெஸ்தெத் கவுர் அரைகுறை ஆடையுடன், ஆபாசமாகவும், ஆசையாகவும் பேசியுள்ளார்.
பின்னர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய பணக்காரர்களின் மெசேஜ்களை ஸ்கீரின் ஷார்ட் மூலம் சேமித்து பின்னர் அதேநபர்களுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டுள்ளார். கேட்ட பணத்தை தரவில்லை என்றால் மேசேஜ்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாகவும் போலீசில் புகார் அளித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
ஜெஸ்தெத் கவுருக்கு லூதியானாவில் சில அடியாட்கள் தெரியும் என்பதால் அவர்கள் மூலம் தன் வலையில் சிக்கிய பணக்காரர்களை மிரட்டியுள்ளார். கேட்ட பணத்தை கொடுக்காத நபர்களை அடியாட்கள் மூலம் கவுர் மிரட்டியுள்ளார். அடியாட்கள் பணக்காரர்களின் செல்போனை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெஸ்தெத் கவுரின் வலையில் சிக்கிய பணக்காரர் ஒருவர் பணம் கேட்டு அடியாட்கள் மூலம் மிரட்டப்பட்டதால் போலீசில் புகார் அளித்தார்.
Controversial Instagram Influencer Jasneet Kaur arrested by Punjab Police. The complainant alleged that she had links with gangsters and was constantly threatening him to demand extortion. pic.twitter.com/iB4NANGwpg
— Nikhil Choudhary (@NikhilCh_) April 3, 2023
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ஸ்டா பிரபலம் ஜெஸ்தெத் கவுரை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளி லக்கி சிந்து என்ற நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜெஸ்தெத் கவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்ப்டுள்ளார். ஜெஸ்தெத் கவுரின் பிஎம்டபுள்யூ சொகுசு கார், செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல; 2018 இல் மொஹாலியில் இதே போன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.