கசிப்பு வாங்கி வர மறந்த 9,11.13 வயது பிள்ளைகளை பாடசாலை சீருடையுடன் வீட்டை விட்டு விரட்டிய தந்தை!

Date:

கசிப்பு வாங்கி வருமாறு கூறிய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்த, பாடசாலை செல்லும் தனது மூன்று பிள்ளைகளை பாடசாலை புத்தகங்கள் மற்றும் சீருடையுடன் வீட்டை விட்டு துரத்திய தந்தை ஒருவரை இங்கிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அவரது மனைவி இதற்கு முன்னர் இங்கிரிய பொலிஸில் ஏழு முறைப்பாடுகளை பதிவு செய்திருந்த நிலையில், பின்னர் அந்த முறைப்பாடுகள் அனைத்தும் சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டன.

கைதானவர் தனது 9, 11 மற்றும் 13 வயதுடைய தனது பிள்ளைகளை அனுப்பி கசிப்பு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அவரது கிராமமான ரைகம்வத்தையில் தேடுதல் மேற்கொண்டதுடன், கசிப்பு காய்ச்சும் உபகரணங்களுடன் ஏழு பீப்பாய் கசிப்பை கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை  கைது செய்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்