27.5 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

12 தமிழக மீனவர்கள் விடுதலை!

வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்த் முன்னிலையில் மீனவர்கள் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகை அரசுடைமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 12 ஆம் திகதி 16 இந்திய மீனவர்கள் யாழ். வெற்றிலைக்கேணி மற்றும் அனலைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் அனலைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வேலணை பிரதேச வைத்தியசாலை சிக்கலுக்கு சுமுக தீர்வு: 24 மணித்தியால சேவை தொடரும்!

Pagetamil

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

Leave a Comment