மதுரையில் தனது தாயாருடன் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் அங்கிருந்தவாறே இரங்கல் தெரிவித்துள்ளார் வடிவேலு.
மாரடைப்பு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி இன்றி அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தமிழக மக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தியும், தங்கள் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.நகைச்சுவை நடிகரான வடிவேலுவும், மறைந்த நடிகர் விவேக்கிற்கு காணொளி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“எனக்கு இருக்க கோடிக்கணக்கான ரசிகர்கள்ல அவரும் ஒருத்தர், நான் அவருக்கு ரசிகர். ரொம்ப எதார்த்தமா, எளிமையா பேசுவார். அவருக்கு இப்படி ஒர இறப்பு வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு, இந்த நேரத்துல என்ன பேசுறதுனே தெரியல” எனத் தன் வருத்தத்தை அழுதபடியே பதிவு செய்திருக்கிறார் வடிவேலு. மேலும், மதுரையில் தனது தாயாருடன் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாததால், அங்கிருந்தவாறே இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக்கின் மறைவு தமிழ் திரையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.