அறிவழகனின் ‘சப்தம்’ படத்தில் இணைந்த நடிகை லைலா

Date:

இயக்குநர் அறிவழகன் இயக்கி வரும் ‘சப்தம்’ படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார். அண்மையில் படத்தில் நடிக்க நடிகை லக்‌ஷ்மி மேனன் ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். இவர் அடுத்ததாக நடிகர் ஆதியுடன் கைக்கோத்து ‘சப்தம்’ படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ஆல்பா பிரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படிப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி தொடங்கியது.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அண்மையில் படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஹாரர் திரில்லராக உருவாகும் ‘சப்தம்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாரில் நிறைவடைந்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் ‘சர்தார்’ படத்திலும், ‘வதந்தி’ இணையத் தொடரிலும் நடித்த நடிகை லைலா ‘சப்தம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்