பல்கலைக்கழக மாணவிகளின் தங்குமிடத்திற்குள் நுழைந்து திருடிய 16, 17 வயது சகோதரர்கள் கைது!

Date:

வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் தங்கியிருந்த வீட்டினுள் மேற்கூரை ஓடுகளை அகற்றி அத்துமீறி நுழைந்து ஐந்து மடிக்கணினிகள் மற்றும் மின்சார கேத்திலை திருடிச் சென்ற இரு இளைஞர்களை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (7) காலையில் இந்த சம்பவம் நடந்தது.

கைதான இரண்டு மாணவர்களும் வவுனியா சிவபுரம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சகோதரர்கள்.

இந்த வீட்டில் பல்கலைக்கழக மாணவிகள் 05 பேர் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (7) அதிகாலை 1.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கூரை ஓடுகளை அகற்றி வீட்டுக்குள் நுழைந்த இரண்டு மாணவர்களும் தங்கும் அறையிலிருந்து பல்கலைக்கழக மாணவிகளின் 5 மடிக்கணினிகள் மற்றும் மின்சார கேத்திலுடன், 13,400 ரூபாவை திருடிச் செல்ல முயன்றனர்.

இந்த மாணவர்கள் தப்பிச்செல்ல முயன்ற போது மாணவிகளின் அலறல் சத்தம் காரணமாக அயலவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்