25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

விஜயதாஷ வெளியில் சொல்லியிருக்கக்கூடாதாம்: வீரசேகர சொல்கிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை தொலபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ச பகிரங்கமாக தெரிவிப்பது முறையான நடவடிக்கை அல்ல என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோட்டை ரஜமஹா விகாரையில் நடந்த நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

துறைமுக நகர விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க குழு கூட்டத்தில் அவர் விவாதித்து தேவையான விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை என்றார்.

இலங்கை காவல்துறை துறைமுக நகரத்தில் கடமையில் இருக்கும். நீங்கள் ஒரு ஹெலிகொப்டரை தரையிறக்க விரும்பினால், முறையான அனுமதி பெற வேண்டும்.
அத்தகைய பின்னணியில், விஜயதாச ராஜபக்ஷ சொன்னது தவறு.

துறைமுக நகர திட்டம் இலங்கை பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாகும். பல்வேறு தரப்புக்கள் இதை நாசப்படுத்த முயற்சிக்கின்றன. இது குறித்து எங்களுக்கு பெரும் சந்தேகம் உள்ளது.

எம்.பி. விஜயதாச ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் குறித்தும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவர் அரசியலமைப்பின் 19 மற்றும் 20 திருத்தங்களுக்கு கையை உயர்த்திய நாடாளுமன்ற உறுப்பினர். அவர் பல சந்தர்ப்பங்களில் கட்சிகளையும் மாற்றியுள்ளார், என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment