ஸ்கந்தா- மகாஜனாவிற்கிடையிலான ‘வீரர்களின் போர்’ 3ஆம் திகதி!

Date:

“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி மார்ச் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மார்ச் 03,04 என இரண்டு தினங்கள் நடைபெறும் போட்டியானது இரு கல்லூரிகளின் பழைய மாணவர்களின் அனுசரனையுடன் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் தொடர்பாக பங்கேற்கும் அணிகளின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் இன்று(28) சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்றது.
இதன்போது கல்லூரி அதிபர்களாலும் இரண்டு அணிகளின் தலைவர்களாலும் வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் எம்.செல்வஸ்தன் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அதிபர் எம்.மணிசேகரன் அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், என்போர் கலந்து கொண்டனர்.

21ஆவது வருடமாக நடைபெறும் குறித்த போட்டி பதினொரு தடவை சமநிலையில் முடிந்ததுடன் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஐந்து தடவையும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நான்கு தடவையும் வெற்றி பெற்றுள்ளது.

இம்முறை சசிகுமார் கஜித் தலைமையில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் ஜெயகாந்தன் கௌரி சங்கர் தலைமையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியும் களமிறங்கவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்