தற்காலிகமாக மூடப்பட்ட பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தை திறக்குமாறு கோரி கல்வி அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிக்குகள் உள்ளிட்ட 62 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் சாமினி விஜேபண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.
8 குற்றச்சாட்டுகளின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 62 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
கல்வி அமைச்சு உள்ளிட்ட கல்வி அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட 62 மாணவர்கள் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.




