இலங்கை கடலில் இந்திய மீனவர்களை தொழில் செய்ய அனுமதிக்கும் திட்டம்: வடக்கு மீனவர்கள் கூட்டாக எதிர்ப்பு!

Date:

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களிற்கு அனுமதியளிக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்களின் சங்கங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

23 க்கும் மேற்பட்ட சங்கம் சமாசங்கள் இந்த கலந்துரையாடலில் பற்கேற்றிருந்தன.

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில்,

கடந்த பல வருடங்களாக இலங்கை கடற்பரப்புக்குள் சட்ட விரோ தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் தொடர்பாக வழக்குகள் கடற்றொழிலில் சமூகம் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வந்த நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தாங்கள் பிரதமராக கடந்த ஆட்சிக் தாங்கள் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் 2016ஆம் ஆண்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி முன் கொண்டு சென்று நிரந்தரத் தீர்வை வழங்குவீர்கள் என நாம் எதிர்பார்த்தோம்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்தியக் கடற் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கருத்து தெரிவித்திருந்தார். இந்த நடைமுறை படகுகளை தொழிலாளருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது இந்திய இழுவைப் படகுகளால் எங்களுடைய கடல் வளமும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் சொத்துக்கள் அமைக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. எனவே எமது கடற்பகுதி இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாய் உள்ளோம் எனவே இலங்கையில் உள்ள கடற்பகுதியில் வெளிநாட்டு கடற்தொழிலாளர்கள் அழிப்பதையும் தடுக்குமாறு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சார்பாக நாங்கள் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்