இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் இணைந்து கொண்டதுடன், இனிமேல் தமிழ் தேசிய கூட்டமைப்புடனேயே செயற்பட போவதாக அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைக்காக குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (26) சண்டிலிப்பாயில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, வலிகாமம் மேற்கு பிரதேசசபையின் இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சிவகுமாரும் கலந்து கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தனது ஆதரவை அறிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தொடர்ந்து செயற்பட போவதாகவும் அறிவித்தார்.




