நடிகை ஹம்சா நந்தினி புற்றுநோய் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வருவதாக பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் ஈ. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழி வாங்குவதற்காக ஈயாக மறுபிறவி எடுக்கும் கற்பனை கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார் ராஜமெளலி. இதில் நானி, சுதீப், சமந்தா உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. அதோடு அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி படத்தில் மடானிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தெலுங்கில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா, 2021 டிசம்பரில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதில், “4 மாதங்களுக்கு முன்பு என் மார்பில் சிறு கட்டி இருந்ததை உணர்ந்தேன். இனி என் வாழ்க்கை பழையபடி இருக்காது என்று அப்பொழுதே உணர்ந்தேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மா கொடிய நோயால் உயிரிழந்தார். அதில் இருந்து பயத்தில் இருட்டில் வாழ்ந்தேன்.
பின்னர் நான் கிளினிக் சென்று கட்டியை செக் செய்துக் கொண்டேன். அதன் பின் surgical oncologist மூலமாக பயாப்ஸி செய்ய வேண்டும் என சொன்னார்கள். அப்போது தான் எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. மேலும், அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப்பட்டது.
உடனே அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றிவிட்டார்கள். ஆனால் அது அத்துடன் முடியவில்லை. BRCA1 (Hereditary Breast Cancer) என்பதால் என் வாழ்க்கை முழுவதும் புற்றுநோய் மீண்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்காக சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது.
இதுவரை 9 முறை கீமோதெரபி செய்துவிட்டனர். இன்னும் 7 முறை செய்ய வேண்டியிருக்கிறது. நான் தைரியமாக இருந்து இந்த நோயை வெல்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளியின் பின்னர் இன்ஸ்டகிராமின் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், தற்போது நன்றாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.