பிரித்தானியாவில் பால் ஏற்றிச்சென்ற டாங்கர் லொறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால், அங்குள்ள ஆறொன்று, பாலாறாக மாறியது.
பிரித்தானியாவின் தென்கிழக்கு வேல்ஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் பகுதியில் டுலைஸ் ஆறு ஓடுகிறது.
நேற்று முன்தினம், பால் ஏற்றிக்கொண்டு கார்மர்தென்ஸ்ரீங் பகுதியில் உள்ள வீதியால் டாங்கர் லொறியொன்று பயணத்துக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த டாங்கர் லொறி டுலைஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டாங்கரில் இருந்த பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது. இதனால், டுலைஸ் ஆறு முழுவதும் பாலாறு போன்று காட்சியளிக்கிறது.
When a milk tanker overturns in the river #llanwrda #wales #milk pic.twitter.com/vnyhr5FXBi
— May 🏴 (@MayLewis19) April 14, 2021
விபத்துக்குள்ளான லொறியில் இருந்து சாரதி பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் டாங்கர் லொறி ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
டாங்கர் லொறியில் இருந்த பால் முழுவதும் ஆற்றில் கலந்ததால் ஆறு முழுவதும் வெண்மை நிறத்தில் பாலாறாக காட்சியளித்தது.