மலையக வீதிகளில் பயணிப்பவர்களிற்கு எச்சரிக்கை!

Date:

கொழும்பு – பதுளை பிரதான வீதி, நுவரெலியா – பதுளை வீதி வாகனப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாலை வேளையில் இந்த பகுதிகளில் மிகுந்த பனிமூட்டம் காணப்படுவதினால் வாகன போக்குவரத்தின் போது மிகுந்த கவனம் செலுத்துமாறும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலையகப் பிரதேசம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை காரணமாக வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, ஹாலிஎல உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நிலை காணப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மரங்கஹவெல, ஹல்தும்முல்ல, தியதலாவ போன்ற பிரதேசங்களிலும் வெலிமட – பதுளை வீதியில் ஹாலிஎல, அம்பவக்க, மொரேதொட்ட பிரதேச வீதிகளிலும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமை மற்றும் கற்பாறைகள் வீழ்ந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

ஹாலிஎல – அம்பவக்க பிரதேசத்தின் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததனால், வெலிமட – பதுளை வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்து மூன்று மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்