யாழில் மதுபோதையில் வந்த சிறுவன்: தாயார் கண்டித்ததால் தற்கொலை!

Date:

மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்ததாக யாழ். போதனை வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்ததை அடுத்து அவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் இரவு பத்து மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை(13) காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதன வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

‘குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது...

மீன் விற்பனையில் அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம்

சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும்...

அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர்களுக்கு மேலங்கிகள் அன்பளிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேலங்கிகள் வழங்கும் நிகழ்வு (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்