வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் இன்றைய தினம் முல்லைத்தீவு பண்டாரவன்னியன் சிலையிலிருந்து ஆரம்பமாகியது.
பேரணியாக முல்லைத்தீவு அலம்பில் சந்தியினை சென்றடைந்து குருந்தூர் மலை ஆக்கிரமப்பினை எதிர்தும், அலம்பில் துயிலுமில்லத்திலும் நினைவேந்தலை மேற்கொண்டு பேரணியாக நீராவியடியை சென்றடைந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பின்னர் தென்னைமரவாடியினூடாக திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது.




