26.1 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

பிரித்தானியா பல்கலைக்கழக விரிவுரையில் கதறியழுத தமிழ் மாணவி… சிறுவயது பாலியல் பலாத்காரம் அம்பலம்: தமிழ் வர்த்தகரிற்கு சிறைத்தண்டனை!

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், தமிழர் ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலிண்டேலைச் சேர்ந்த 61 வயதான ஆனந்தராஜா பிரேமகுமார் என்பவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வியாழன் அன்று வூட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் பின்னர் அவருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டிசம்பரில் அதே நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் அவர் ஒரு சிறுமியுடன் நான்கு பாலியல் செயல்பாடுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

பிரேமகுமார் தனக்கு தெரிந்த 16 வயதுக்குட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 2010 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு நீரிழிவு மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது.

மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜா பிரித்தானியாவில் உள்ள தமிழ் வர்த்தக பிரமுகராவார்.  ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடத்துவது, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது போன்ற வர்த்தகங்களிலும் ஈடுபட்டார்.

2010இல் அப்போது 13 வயதேயான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர்.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். எனினும், அவர்கள் காவல்துறையை அணுகவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர்.

அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதிப் பரீட்சையையும் முடித்துக்கொண்ட பின் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

பெருநகர காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: இந்த இளம் பெண் காவல்துறையிடம் பேசுவதற்கும் இந்த விசாரணைக்கு ஆதரவளிப்பதற்கும் அபார தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“பிரேமகுமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதன் மூலம் நீதி நடந்துள்ளது என்ற உணர்வை அவருக்குத் தருகிறது என்று நம்புகிறேன்” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான மற்றவர்களுக்கு, சம்பவம் நடந்து எவ்வளவு காலம் கடந்தாலும், காவல்துறையிடம் முன் வந்து பேசுவதற்கான நம்பிக்கையை இது கொடுக்கும் என்று நம்புகிறேன்“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

Leave a Comment