26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

யாழ் ரௌடிகளை கைது செய்ய உத்தரவு!

இன்று சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர்மகிந்த குணரட்ண உத்தரவு பிறப்பித்துள்ளார்

சுன்னாகம் பகுதியில் இன்று மதியம் சினிமா பாணியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்மகிந்த குணரட்ண யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்

இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் முரண்பாட்டின் காரணமாகவே இன்றைய தினம் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரிய வந்துள்ளது

எனினும் பட்டப்பகலில் பொதுமக்கள் பார்த்திருக்க இந்த சம்பவம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே உடனடியாக தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதோடு கொடுத்த தாக்குதல் சம்பந்தமான பூரண அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி போலீஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாதுகாப்பு முறையில் புரட்சி – சிறைகளுக்கு விசேட அணிகள்

east tamil

பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

east tamil

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

இந்தியர் என நினைத்து பிடித்த யாழ் ஐயரை விடுவிக்க இலஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி!

Pagetamil

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

Pagetamil

Leave a Comment