ஊசி போட்டதால் பெரிய அளவுக்கு பாதிப்பில்லை: கொரோனா தொற்றிற்குள்ளான செந்திலின் வீடியோ!

Date:

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சொல்வதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் செந்திலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செந்திலுக்கு மட்டும் அல்லாமல் அவரின் மனைவி, மகன், மருமகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தன் அப்பாவை பேச வைத்து செந்திலின் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் செந்தில் கூறியிருப்பதாவது,

வணக்கம். எனக்கு கொரோனா வந்தது உண்மை தான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. டெஸ்ட் எடுத்துக்கிட்டு வீட்டில் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். டாக்டர் சொன்ன மருந்து, மாத்திரையை சாப்பிடுங்க.

எனக்கு கார்பரேஷன்ல ஊசி போட்டதால் தான் பெரிய அளவுக்கு பாதிக்கவில்லை. அதே மாதிரி நீங்களும் ஊசி போட்டுக்கங்க. உடம்புக்கு அவ்வளவு நல்லது. நாளைக்கு அடுத்த டெஸ்ட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க. நெகட்டிவ்னா வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கச் சொன்னாங்க. பயப்படத் தேவையில்லை. வாழ்க வளமுடன் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/rameshlaus/status/1382156436327727104

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு வரலாற்றிலேயே...

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்