ஆப்கானிலிருந்த வெளியேறும் அமெரிக்க படைகள்!

Date:

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கா தனது படையினர் முழுவதையும் திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற ட்ரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை மே 1ஆம் தேதிக்குள் திரும்பபெறுவதும் சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தலீபான்களுடனான ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்த கோரசம்பவத்தின் 20 வது ஆண்டு விழா அனுசரிக்கப்பட உள்ளது.

அந்த நாளுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் அனைவரையும் திரும்பப்பெற ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜோ பைடன் இன்று வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் 6,600 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 2,500 பேர் அமெரிக்க வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன்...

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்