ஒக்சிசன் பற்றாக்குறையினால் 9 நோயாளிகள் உயிரிழப்பு :குற்றம் சாட்டும் உறவினர்கள்

Date:

மும்பை:

`குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் விநாயக் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தோம். ஆனால் மருத்துவமனையில் ஒக்சிசன் பற்றாக்குறை இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் மறைத்துவிட்டது’ – உறவினர்கள்

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒக்சிசன் சிலிண்டர், வென்டிலேடர்கள், கொரோனாவுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இந்நிலையில் மும்பை அருகில் உள்ள விநாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் கொரோனா உட்பட பல்வேறு நோய்களுக்காக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இரவில் திடீரென ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சில மணி நேரத்தில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக 7 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனை நிர்வாகம் அவசரமாக வேறு மருத்துவமனையில் இருந்து ஒக்சிசன் சிலிண்டர்களை ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்தது.

ஆனாலும் நோயாளிகளை காப்பாற்ற முடியவில்லை. நாலாசோபாரா பகுதியில் இந்த மருத்துவமனைதான் பெரியது ஆகும். எனவே அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்தும் உயிருக்கு போராடும் நோயாளிகள் விநாயக் மருத்துவனையில் கொண்டு வந்து சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று காலையில் தான் நோயாளிகள் இறந்தது குறித்து உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

உயிரிழந்த நோயாளி ஒருவரின் உறவினர் இது குறித்து கூறுகையில், `குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் விநாயக் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தோம். ஆனால் மருத்துவமனையில் ஒக்சிசன்பற்றாக்குறை இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் மறைத்துவிட்டது’ எனத் தெரிவித்தார். ஆனால் ஒக்சிசன் பற்றாக்குறை என்று வெளியான செய்தி வதந்தி என்று பொலிஸார் தெரிவித்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போதிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர்களும், `நோயாளிகள் வயது மூப்பு மற்றும் இதர உடல் நலக்கோளாறு காரணமாகவே இறந்துள்ளனர். ஒக்சிசனுக்கு பற்றாக்குறை இல்லை’ என்று தெரிவித்தனர். அருகில் உள்ள பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் இந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நாலாசோபாரா, விரார், வசாய் மருத்துவமனைகளில் ஒக்சிசனுக்கு பற்றாக்குறை நிலவுவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஒக்சிசன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்திருப்பதற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகி கிரித்சோமையா தெரிவித்துள்ளார். ஒக்சிசன் பற்றாக்குறையால் 9 நோயாளிகள் இறந்திருப்பதாகவும், அவர்களை அரசு கொலை செய்திருப்பதாகவும் கிரித் சோமையா குற்றம்சாட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...

குற்றவாளிகளுடன் இணைந்து சரக்கடித்த மட்டக்களப்பு பொலிஸ்காரரின் நிலை!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்