ஹிட்லர் எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரியாக இருக்க முடியாது என இலங்கை அரசியல்வாதிகளிற்கு சூடு வைத்துள்ளார் இலங்கைக்கான ஜெர்மனி தூதர் ஹோல்கர் ஷுபர்ட்.
தனது ருவிற்றரில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச ஹிட்லரை போல செயற்பட வேண்டுமென்றே அவருக்கு வாக்களித்தவர்கள் விரும்பினர், அவர் அப்படி செயற்படாததே அரசாங்கத்தின் மீதான விமர்சனத்திற்கு காரணம் என அரிய கருத்தொன்றை தற்போதைய அரசின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியிருந்தார்.
இது தொடர்பில் ஜேர்மனிய தூதர் இட்ட பதிவில்,
“ஒரு ஹிட்லர்” இன்று இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று கூறுவதை நான் கேட்கிறேன். மில்லியன் கணக்கான இறப்புகளுடன், கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித துன்பங்களுக்கும் விரக்திக்கும் அடால்ஃப் ஹிட்லர் தான் காரணம் என்று அந்தக் குரல்களை நினைவூட்டுகிறேன். நிச்சயமாக எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரி இல்லை!“ என தெரிவித்துள்ளார்.
I‘m hearing claims that “a Hitler“ could be beneficial to Sri Lanka today. Let me remind those voices that Adolf Hitler was responsible for human suffering and despair beyond imagination, with millions of deaths. Definitely no role model for any politician!
— Ambassador Holger Seubert (@GermanAmbColo) April 13, 2021