விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த ஆடை அணிந்தபடி, சில இளம் பெண்கள் வெளியிட்ட சமூக ஊடக வீடியோ ஒன்று சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் விதவிதமான வீடியோக்கள் வெளியிடுவதில் இளவயதினருக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. ரிக்ரொக், இன்ஸ்டகிராமில் பல வித வீடியோக்களை வெளியிட்டு, தினமும் காலையில் ஏதாவதொரு பஞ்சாயத்துடன்தான் நெட்டிசன்களின் காலைகளை விடிய வைக்கிறார்கள் பலர்.
அண்மையில் கிளிநொச்சி அழகிப் போட்டி அலப்பறைகள் பல நாட்களாக பஞ்சாயத்தான நிலையில், தற்போது புலம்பெயர் யுவதிகள் சிலர் சர்ச்சை வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சில யுவதிகள் இணைந்து தயாரித்த ரீல் வீடியோ ஒன்றில், விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த ஆடை அணிந்து, விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை போன்ற தோற்றத்தில் தோன்றுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தோற்றத்தில் தோன்றி அப்படியென்ன புரட்சிகர கருத்து சொல்லப் போகிறார்கள் என ஆர்வத்துடன் பார்த்தால், ஐயிட்டப் படப்பாணி வசனங்களை கூறியுள்ளனர்.
அந்த வீடியோவில் நமது தமிழ் கண்மணிகள் கூறிய அரிய கருத்து- “பொம்பளய கதற விட ஆம்பிளையா இருந்தா மட்டும் பத்தாது. அதுக்கு மேலயும் வேண்டும். கீழயும் வேண்டும்“.
இந்த வீடியோவை பலரும் கண்டித்து வருகிறார்கள்.




