கிறிஸ்மஸ் ஆராதனைகளின் போது தேவாலயத்தில் காணிக்கையாக வழங்கப்பட்ட பொதிகளில் 2 ரி 56 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாதம்பை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி இரவு மாதம்பை பங்கிலுள்ள 8 தேவாலயங்களில் நத்தார் ஆராதனைகள் இடம்பெற்று பின்னர் அந்தந்த தேவாலயங்களினால் பெறப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் மாதம்பை பிரதான தேவாலயமான புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கத்தோலிக்க தேவாலயங்களில் நத்தார் ஆராதனையின் போது பக்தர்கள் காணிக்கை வழங்குவது பொதுவான நடைமுறையாகும்.
ஒவ்வொரு தேவாலயத்திலிருந்தும் கொண்டு வரப்பட்ட காணிக்கை பொதிகள் பிரிக்கப்பட்ட போது, நகைகளை எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் தராசில் இரண்டு ரி 56 தோட்டாக்கள் வைத்து அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மாதம்பை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாதம்பை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது எந்த தேவாலயத்தில் வழங்கப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




