27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

யாழில் இறந்தவர்களையும் உயிர்ப்பித்த குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

மோசடி ஆவணம் தயாரித்து காணி விற்பனை செய்த வழக்கில் இரண்டாவது முறையாக கைதான சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

சட்டவிரோதமான முறையில், ஆறு பரப்புக் காணிக்கு பொய்யான உறுதி முடித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டத்தரணி ஒருவர் உட்பட ஐந்து பேரை யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 1988ம் ஆண்டு இறந்துவிட்டார். உயிரிழந்த நபர் 2021ம் ஆண்டு விற்பனை செய்துள்ளதாக காணி உறுதி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணியை வாங்கியவர் மற்றும் சாட்சி கையொப்பமிட்டவர்கள் என நால்வர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதாகியிருந்த நிலையில், அதற்கு உடந்தையாக இருந்து பதிவுகளை மேற்கொண்ட சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் பிறிதொரு காணி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தற்போது, மற்றொ காணி மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment