மோதிப் பார்க்க தயார்; பலமானவர்களையே வீட்டுக்கு அனுப்பினேன்: மைத்திரி!

Date:

அரசியல் ரீதியாக யாரேனும் மோத வந்தால் மோதிப்பார்க்க தயார் எனவும், தற்போது மோத வருபவர்களை விட பெரியவர்களுடன் மோதி, அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (30) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, அரசியல் ரீதியாக பிரிந்துள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பல்வேறு தரப்பினரின் ஆதரவை கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை சீர்குலைக்கச் சென்றவர்கள் பலவற்றைச் செய்ததாகவும், ஆனால் அவர்களை விட பலமானவர்களைச் எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நடுக்கடலில் 14 அகதிகள் சடலமாக மீட்பு! ஸ்பெயின் கடற்பரப்பில் அரங்கேறிய கோர விபத்து – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 100 அகதிகளுடன் பயணித்த படகு...

மதியம் 1 மணிக்குப் பிறகு உஷார்! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட திடீர் வானிலை எச்சரிக்கை!

இலங்கையின் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று...

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்