வவுனியா விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம்!

Date:

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர். அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்தன. இதில் முன்னால் சென்ற பேருந்து கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது. அதன் பின்னால் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்தை தடுக்க வீதியை விட்டு விலகி சென்று நிறுத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (23), பேருந்து சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி நாவலப்பிட்டியை சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கற்ற முதலாம் வருட மாணவியான அவர், நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, விபத்தில் உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான அதி சொகுசு பேருந்துகளை மீட்கும் பணியை இராணுவத்தினர் இணைந்து பாரந்தூக்கியுடன் துணையுடன் அகற்றினர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பதிவு!

தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது புலிகளை மகிமைப்படுத்துவதாக அமையக்கூடாது!

இலங்கையில் போரினால் உயிரிழந்த பொதுமக்களின் நினைவுகூறுதலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க...

ஈரானின் புதிய தலைவராக்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதியின் வீட்டின் மீது தாக்குதல்: இஸ்ரேல், அமெரிக்க திட்டம் பிசுபிசுத்தது!

போரின் தொடக்கத்தில், ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்தின் தெஹ்ரான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்