25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
மருத்துவம்

காதுக்குள் புகுந்த பூச்சியை வெளியேற்றுவது எப்படி?

யானை மிகப்பெரிய விலங்காக இருந்தாலும், அதன் காதுக்குள் சிறிய எறும்பு நுழைந்தால், அதோகதிதான். யானையின் நிலைமையே இப்படியென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்… துடிதுடித்துப் போய்விடுவோம்.

காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்… விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வேலுமணி.

“காதுக்குள் பூச்சியோ, எறும்போ நுழைந்துவிட்டால், காது நிறைய எண்ணெய் அல்லது உப்புக் கரைசலை ஊற்றிப் பார்க்கலாம்; அதனால், பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக இறந்துவிடும். அதை எளிதாக வெளியே எடுத்துவிடலாம். இது, எறும்பு மற்றும் சிறு பூச்சிகளுக்கு மட்டுமே பலனளிக்கும். பெரிய பூச்சிகள், வண்டுகள், உண்ணிகளை வெளியேற்ற உதவாது.

பெரிய பூச்சிகள் காதுக்குள் நுழைந்துவிட்டால், அவை காதிலுள்ள ஜவ்வுகளைப் பிடித்துக்கொண்டு உள்ளேயே தங்கிவிடும். சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக காது, மூக்கு தொண்டை மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அட்வான்ஸ்ட் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் பூச்சியை வெளியே எடுத்துவிடலாம்.

குழந்தைகளின் காதுக்குள் பூச்சி நுழைந்தால், மயக்க மருந்து கொடுத்து எடுக்க வேண்டியிருக்கும். பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றைக் காதில் நுழைத்து, பூச்சியை எடுக்க முயலும்போது உள்காதிலுள்ள மென்மையான பகுதிகள் பாதிக்கப்படலாம், காதில் காயம் ஏற்படலாம்“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment