3 மீனவர்கள் மாயம்!

Date:

கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் நேற்று காலை 8 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (47), கதிர்காமு சோதிலிங்கம் (47) மற்றும் க.தவச்செல்வம் (40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...

கைதான 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கும் விளக்கமறியல்

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக்...

பாசிக்குடாவில் கரையொதுங்கிய சடலம்

மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்