மிரிஹான, புறக்கோட்டை சந்தியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 63 வயதுடைய கடையின் தொழிலாளி என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருக்கு கடையின் உரிமையாளர் கடையிலேயே தங்குமிட வசதி செய்து கொடுத்துள்ளார்.
தீயினால் கடை முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பும் கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை நுகேகொட பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வரும் நிலையில், நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.




