26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஐ.நா தீர்மானத்தின் எதிரொலி: 3 இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு பயணத்தடை விதிக்கிறது கனடா!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர்ந்த, இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு உறுப்பு நாடுகள் பயணத்தடை விதிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

இதில், உடனடி நடவடிக்கையெடுக்கும் கனடா, குறைந்தது மூன்று இராணுவ உயர் அதிகாரிகளை தடைசெய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும் இதைப் பின்பற்றும்.

ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை வியாழன் அன்று “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 20 நாடுகள் வாக்களிக்கவில்லை, ஏழு நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.

இந்த தீர்மானத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் குறித்து கணிசமான கவனம் செலுத்தப்பட்டது. இது ஊழலைக் கையாள்வதோடு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்த போராட்டக்காரர்களை கையாண்ட விதம் குறித்தும் அரசாங்கத்தை விமர்சித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் கீழ் செயல்படும் புதிய செயலகம், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் புதிய தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் விசாரிக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

Leave a Comment