சூரியன் தற்போது இலங்கைக்கு உச்சம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும்.
அதன்படி, இன்று சூரியன் மேல் இருக்கும் அருகிலுள்ள பகுதிகள் கொழும்பு, மல்வான, கொஸ்கம, சீதவாக்க, மால்தெனிய, ரொசெல்ல, தலாவாக்கல்லை, சீதாஎலிய, எட்டம்பிட்டிய, பசறை ஆகிய பகுதிகளின் மேலாக மதியம் 12:13 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்.
நாளை (08) பொலவத்த, வெதெனிய, வட்டராம, அம்பகமுவ, திகன, மஹாவல, கல்கமுவ, அம்பாறை மற்றும் ஒலுவில் பகுதிகளுக்கு மேலே உச்சம் கொடுக்கும்.
நாளை மதியம் 12.00 மணிக்கு இந்த பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.



