புகையிரத திணைக்கள வருமானம் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவிற்கே போதும்!

Date:

புகையிரத திணைக்களம் கடந்த வருடம் ஈட்டிய 2,600 மில்லியன் ரூபா வருமானத்தில், அதன் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக ரூபா 2,300 மில்லியன் செலுத்த வேண்டியிருந்ததாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தன நேற்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பள கொடுப்பனவுகளுக்காக, புகையிரத திணைக்களம் 7,000 மில்லியன் ரூபா செலுத்தியதாகவும், புகையிரதக் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் நேற்று (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“புகையிரத துறையின் வருமானம் ரூ. 2.6 பில்லியன். திணைக்களத்தின் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கு ரூ. 2.3 பில்லியன் செலவிடப்பட்டது. சம்பளத்திற்கு ரூ.7 பில்லியன் ஒதுக்கப்பட்டது. இப்படிப்பட்ட அமைப்பை நாம் எப்படி பராமரிக்க முடியும்? அதனால்தான் கட்டணத்தை உயர்த்தினோம். வருவாய்க்கு ஏற்ப செலவினங்களை நிர்வகிக்க முடியாவிட்டால், குழப்பத்தில்தான் இருக்கிறோம். வரி வருவாயில் 80 சதவீதத்தை சம்பளமாக செலுத்தும் ஒரே நாடு இலங்கைதான்” என சுட்டிக்காட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை!

தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று...

பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க முறையான தகுதியுடைய ஆசிரியரல்ல: புதிய குற்றச்சாட்டு!

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பல்கலைக்கழகம், தேசிய கல்விக்கல்லூரி அல்லது ஆசிரியர்...

ஹெரோயின், கஞ்சா கலந்து அடித்துவிட்டு பிக்குகள் போராட்டத்தில் பங்கேற்ற ஆசாமி!

அனுராதபுர புனிதப் பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரருடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்